உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரியில் இலவச சமஸ்கிருத பயிற்சி வகுப்பு துவக்கம்

புதுச்சேரியில் இலவச சமஸ்கிருத பயிற்சி வகுப்பு துவக்கம்

புதுச்சேரி:புதுச்சேரியில் இலவச சமஸ்கிருத பயிற்சி வகுப்பு துவங்குகிறது.இது குறித்து சமஸ்கிருத பாரதி புதுச்சேரி கிளையை சேர்ந்த ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதுச்சேரியில் சமஸ்கிருத பாரதி சார்பில் லாஸ்பேட்டை சங்கரா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் வரும் 19ம் தேதி மாலை 3:00 மணியளவில், இலவச பயிற்சி வகுப்பு துவங்குகிறது.

சமஸ்கிருத மொழியை அடிப்படை பேச்சு வழக்கிலும், முதல்நிலை தேர்வு எழுதுவதற்கும் இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்படுகிறது. 13 வயதுக்கு மேற்பட்ட இருபாலரும் கலந்து கொள்ளலாம். முன்பதிவிற்கு 94861 02720, 0413 2255445 என்ற எண்ணில் தொடர்பு கொள்வும் என கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !