உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராஜபாளையம் சொக்கநாதன்புத்தூர் கோயில் தேரோட்டம்

ராஜபாளையம் சொக்கநாதன்புத்தூர் கோயில் தேரோட்டம்

ராஜபாளையம்:ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் மாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் தேர் திருவிழாவை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்து
இழுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூர் மாரியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா கடந்த 4ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் நித்யானந்த விநாயகர், வடகாசியம் மன், பத்திரகாளியம்மன் அலங்காரங்களுடன் தட்டிச்சப்பரம், சிங்கவாகனம், ரிஷப பவாகனம், புஷ்ப விமானம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் காட்சி அளித்தார்.

விழாவின் முக்கிய நிகழ்சியான தேரோட்டம் நேற்று (அக்.,12ல்) காலை 10:00 மணிக்கு துவங்கி யது. ராஜபாளையம் தி.மு.க., எம்.எல்.ஏ., தங்கப்பாண்டியன் துவக்கி வைத்தார்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர்ப்பாதையில் அங்கப்பிரதட்சணம் செய்தனர். மாலை முளைப்பாரி வீதி உலா , வான வேடிக்கை நடைபெற்றது. ஏற்பாடுகளை உறவின்முறை நாட்டாண்மைகள் மாடசாமி, அய்யப்பன், காளிதாஸ், குருக்களஞ்சியம், சிவகுமார்
செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !