நாமக்கல் இந்து அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED :2557 days ago
நாமக்கல்: மாவட்ட இந்து அமைப்புகள் சார்பில், நாமக்கல்லில் கண்டனக்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. நாமக்கல் ஆஞ்சநேய பக்த சபா நிர்வாகி மணி தலைமை வகித்தார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, அனைத்து வயதுள்ள பெண்களும் செல்லலாம் என்பன உள்பட, பல்வேறு உத்தரவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப் பட்டது. ஐயப்ப பக்தர்கள்
சங்கம், இந்து முன்னணி, இந்து சமய ஆன்மிகப் பேரவை உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகளைச் சேர்ந்த பிரமுகர்கள் பங்கேற்றனர்.