உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை ஏழுமலையானை 35 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

உடுமலை ஏழுமலையானை 35 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

 உடுமலை:உடுமலை ஏழுமலையான் கோவிலில், கடைசி புரட்டாசி சனிக்கிழமையான நேற்று, 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். உடுமலை, மூணாறு ரோட்டில், மேற்கு தொடர்ச்சிமலை, உடுமலை வனச்சரக பகுதியில் ஏழு மலையான்  கோவில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து, 2,500 மீட்டர் உயரத்தில், அமைந்துள்ள இக்கோவிலில், புரட்டாசி சனிக்கிழமைகள் மட்டும், பக்தர்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. புரட்டாசி கடைசி சனிக்கிழமையான நேற்று முன்தினம், இரவிலிருந்தே, பக்தர்கள் மலைக்கு  வரத்துவங்கினர். கரடு, முரடான மலைப்பாதையில், ஏழு கிலோ மீட்டர் துாரம், பக்தர்களின் கோவிந்தா கோஷம் ஒலித்தது. கடந்த மூன்று வாரமாக, தலா, 25 ஆயிரம் பக்தர்கள் வரை வந்தனர். நேற்று, 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்தனர். நீண்ட  வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனர். நேற்று அதிகாலை சுவாமிக்கு, பல்வேறு திரவியங்களில் சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !