சுகாசன பெருமாள் கோவில் தேர் திருவிழா
ADDED :5029 days ago
திட்டக்குடி :திட்டக்குடி சுகாசன பெருமாள் தைப்பூச பிரமோற்சவத்தையொட்டி நேற்று தேர் திருவிழா நடந்தது. தைப்பூச பிரம்மோற்சவத்தையொட்டி கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, தினமும் பெருமாள், தாயாருக்கு சிறப்பு அபிஷேகங்களும், சிறப்பு திருமஞ்சனம், யாகசாலை பூஜைகள் நடந்து வருகின்றன. 9ம் நாள் உற்சவமான திருத்தேர் விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடந்தன. உற்சவர் பெருமாள், தாயார் வேதாந்தவல்லி சாமிகள் தேரடியில் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அமர்த்தப்பட்டு காலை 10.30 மணிக்கு பக்தர்கள் வடம் பிடித்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக இழுத்து வந்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.