புன்செய்புளியம்பட்டி பெருமாள் கோவிலில் விஜயதசமி வழிபாடு
ADDED :2549 days ago
புன்செய்புளியம்பட்டி: விஜயதசமியை ஒட்டி, புன்செய்புளியம்பட்டி, கோவில்புதூர், கரிவரதராஜ பெருமாள், தங்கக்காப்பு அலங்காரத்தில், நேற்று (அக்., 19ல்) அருள் பாலித்தார்.
ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட பக்தர்கள் தரிசித்தனர். இந்நிலையில் விஜய தசமியை ஒட்டி, கோவிலில் இன்று அக்., 20ல், அம்புசேர்வை விழா நடக்கிறது.
முன்னதாக நேற்றிரவு (அக்., 19ல்) , 12:00 மணியளவில், கரிவரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து, குதிரை, கருட, ஆஞ்சநேயர் மற்றும் சப்பரம் ஆகிய வாகனங்களில் சுவாமி அழைப் புடன், விழா துவங்கியது. காலை, 6:00 மணிக்கு, குதிரை வாகனத்தில், கரிவரதராஜ பெருமாள் எழுந்தருளுகிறார். காலை 9:00 மணிக்கு, கவாள பூஜை, மாலை, 6:00 மணிக்கு, பாவாடை பூஜை நடக்கிறது. இரவு, 8:30 மணிக்கு, சுவாமி வாகனங்கள், மீண்டும், கரிவரதராஜ பெருமாள் கோவிலை அடைகிறது.