பிரசாதம் இது பிரமாதம்: மைசூரு கடுகு சாதம்
என்ன தேவை
அரிசி – 200 கிராம்
மிளகாய் வற்றல் – 6
கடலைப் பருப்பு – 2 டீஸ்பூன்
கடுகு – - 1 டீஸ்பூன்
மஞ்சள் துண்டு – 4 மிளகளவு
தேங்காய்த்துருவல் – 4 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் – 6 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் – தேவையான அளவு
புளி – கொட்டைப் பாக்கு அளவு
கறிவேப்பிலை – 2 இணுக்கு
உப்பு – தேவையான அளவு
எப்படி செய்வது: சாதத்தை குழையாமல் ஒன்றோடொன்று ஒட்டாமல் பதமாக வேக வைக்கவும். தேங்காய்த் துருவல், மிளகாய் வற்றல், புளி, உப்பு, மஞ்சள், கடுகைத் தண்ணீர் சேர்க்காமல் கரகரப்பாக அரைக்கவும். கறிவேப்பிலை, அரைத்த விழுதை சாதத்தோடு சேர்த்துக் கொள்ளவும். பெருங்காயத்தை துாள் செய்யவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பெருங்காயத்தைப் பொரிக்கவும், கடலைப் பருப்பை பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். எண்ணெய், பெருங்காயப் பொடி, கடலைப்பருப்பை சேர்த்து நன்றாகக் கலக்கவும். சுவையான மைசூரு கடுகு சாதம் தயாராகி விடும்.