உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செண்பகாதேவியம்மன் கோயிலில் பவுர்ணமி பூஜை கோலாகலம்

செண்பகாதேவியம்மன் கோயிலில் பவுர்ணமி பூஜை கோலாகலம்

குற்றாலம்:குற்றாலம் செண்பகாதேவியம்மன் கோயிலில் பவுர்ணமி பூஜை சிறப்பாக நடந்தது.குற்றாலம் மெயின் அருவிக்கு மேல் மலையின் உட்பகுதியில் செண்பகாதேவியம்மன் மற்றும் குறுமுனி அகஸ்தியர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் தை மாத பவுர்ணமி பூஜை சிறப்பாக நடப்பது வழக்கம். இந்த ஆண்டு தை மாத பவுர்ணமி பூஜையை முன்னிட்டு அகல் விளக்கு வழிபாடு நடந்தது. செண்பகாதேவி,அகஸ்தியர் சத்சன்மார்க்க சபை தர்மஸ்தாபன அறக்கட்டளை சார்பில் 504 அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு நக்கிரக ஜோதி வழிபாடு நடந்தது.செண்பகாதேவியம்மன், அகஸ்தியருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சன்மார்க்க சபை தலைவர் முத்துக்குமாரசாமி தலைமையில் கட்டளைதாரர்கள் மேலகரம் சுப்பிரமணியன், மணிகண்டன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !