பக்தர் வீட்டுக்கு வரும் பராசக்தி!
ADDED :2745 days ago
ராஜஸ்தானில் ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்தவர்கள் நவராத்திரியை சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். இந்தப் புண்ணிய காலத்தில் பராசக்தி ஒவ்வொருவர் இல்லத்துக்கும் வருகை தருகிறாள் என்பது நம்பிக்கை. வீட்டுச் சுவரில் வரையப்பட்ட மந்திரம், ஸ்வஸ்திக் சின்னம் இவற்றையே சக்தியாக பாவித்து பெண்கள் வழிபடுகிறார்கள். அன்னையின் சிலை எதுவும் பயன்படுத்துவது இல்லை. சென்னை போரூர் மதனந்தபுரத்தில் உள்ளது துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி கோயில். அன்ன வாகனம் முன் நிற்க, இங்கு தனி சன்னதியில் சரஸ்வதி காட்சி தருகிறாள். இவளை வணங்கி ‘சகலகலா வல்லி மாலை ’ துதியை பாராயணம் செய்தால் கல்வியறிவு பெருகும் என்பது நம்பிக்கை.