சுங்குவார்சத்திரத்தில் சரண கோஷ பேரணி
ADDED :2634 days ago
சுங்குவார்சத்திரம்:சுங்குவார்சத்திரத்தில், அய்யப்ப பக்தர்களின், சரண கோஷ பேரணி நேற்று (அக்., 25ல்) நடந்தது.சபரிமலைக்கு செல்ல அனைத்து வயது பெண்களை அனுமதித்து, புனித தன்மையை பாழாக்கும் நடவடிக்கையை தடுக்க வலியுறுத்தி, சுங்குவார்சத்திரம் சுற்று வட்டார, அய்யப்ப பக்தர்கள் சார்பில், கண்டன சரணகோஷ பேரணி நேற்று (அக்., 25ல்) நடந்தது.
சுங்குவார்சத்திரம் செல்வ விநாயகர் கோவிலின் முன் துவங்கிய பேரணி, பஜார் பகுதியில், நான்கு சாலையின் வழியே சென்றது.இதில், கூத்து கலைஞர்கள், சிவன், பார்வதி, முருகன் போன்ற வேடம் தரித்து, பேரணி முன் நடனமாடியவாறு சென்றனர்.