திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.93.63 லட்சம் உண்டியல் காணிக்கை
ADDED :2595 days ago
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவில் உண்டியலில், 93.63 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கை இருந்தது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கிலும், பவுர்ணமிதோறும் லட்சக்கணக்கான பக்தர்களும் கிரிவலம் சென்று, சுவாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் பலர், உண்டியலில் காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். உண்டியல் காணிக்கை, நேற்று (அக்.,30ல்) கோவில் வளாகத்தில், கோவில் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் நடந்தது. இதில், 93 லட்சத்து, 63 ஆயிரத்து, 391 ரூபாய், 114 கிராம் தங்கம், 621 கிராம் வெள்ளி ஆகியவற்றை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.