அன்னுார் பெருமாள் கோவிலில் சிறப்பு தரிசனம்
ADDED :2530 days ago
அன்னுார்: தீபாவளி பண்டிகை முன்னிட்டு, அன்னுார் பெருமாள் கோவிலில் காலை 5:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 7:30 மணிக்கு அலங்கார பூஜை, அபிேஷக பூஜைகள் நடந்தன. கரிவரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி சமேதரராக, தங்க கவசம் அணிந்து அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பழமையான மன்னீஸ்வரர் கோவிலில் மன்னீஸ்வரர், அருந்தவச்செல்வி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது.பண்டிகையை முன்னிட்டு, கோவில்பாளையம், காலகாலேஸ்வரர் கோவில், கவையகாளியம்மன் கோவில், மொண்டிபாளையம் வெங்கடேசப்பெருமாள் கோவில்களில் பக்தர்கள் குவிந்தனர்.