போடியில் கந்தசஷ்டி சிறப்பு பூஜை
ADDED :2636 days ago
போடி:கந்த சஷ்டி திருவிழாவின் நான்காம் நாளான நேற்று (நவம்., 11ல்) போடி பரமசிவன் கோயிலில் முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனை நடந்தது. போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் சிறப்பு பூஜை நடந்தது. சஷ்டி கவசம் பாடி ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.