உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை ராமநாதபுரம் பழனி ஆண்டவர் கோவிலில் கந்தர்சஷ்டி சூரசம்ஹார விழா

கோவை ராமநாதபுரம் பழனி ஆண்டவர் கோவிலில் கந்தர்சஷ்டி சூரசம்ஹார விழா

கோவை: கோவை ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் உள்ள, ஸ்ரீ பழநி ஆண்டவர் கோவிலில் கந்தர் சஷ்டி சூரசம்ஹார லட்சார்ச்சனையின் 30ம் ஆண்டு விழா, காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீ
சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில் நடந்தது.

இதை தொடர்ந்து முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இன்று (நவம்., 12ல்) மாலை 6:00 மணிக்கு முருகபெருமான் மகாசக்தியிடம் வேல் வாங்கும் உற்சவம் நடக்கிறது.

நாளை (நவம்., 13ல்) காலை 7:00 மணிக்கு, சூரபத்மனை எழுந்தருள செய்தல் நிகழ்ச்சியும், மாலை 6:00 மணிக்கு முருகப்பெருமான் சம்ஹாரத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு 10:00 மணிக்கு முருகபெருமான் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து, சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சியும் நடக்கிறது. 14ம் தேதி முருகபெருமான் திருக்கல்யாணம் மற்றும் மதியம் அன்னதானம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !