வாழப்பாடியில், ஐயப்பா சேவா சங்கம் பேரணி
ADDED :2633 days ago
வாழப்பாடி: வாழப்பாடியில், விஷ்வ இந்து பரிஷத் மற்றும் ஐயப்பா சேவா சங்கம் சார்பில், நேற்று (நவம்., 11ல்), பேரணி நடந்தது.
மாவட்ட செயலர் செந்தில்குமார் தலைமை வகித்தார். அதில், சபரிமலை விவகாரத்தில், உச்சநீதிமன்றம் தீர்ப்பை, மறுசீராய்வு செய்ய வலியுறுத்தி, வடபத்ர காளியம்மன் கோவில் வளாகத்திலிருந்து, பஸ் ஸ்டாண்ட் வரை, பாரம்பரியம் காப்போம் என, திரளானோர் கோஷம் எழுப்பியபடி சென்றனர். தொடர்ந்து, பஸ் ஸ்டாண்ட் அருகே, பொதுக்கூட்டம் நடந்தது. அதில், மாவட்ட தலைவர் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.