கோவை ராமநாதபுரம் பழநி ஆண்டவர் கோவில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :2891 days ago
கோவை: கோவை ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் உள்ள, ஸ்ரீ பழநி ஆண்டவர் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹார லட்சார்ச்சனையின், 30ம் ஆண்டு விழா, காமாட்சிபுரி ஆதினம் ஸ்ரீ சிவ லிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில்நடந்தது.
முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. 13ம் தேதி காலை 7:00 மணிக்கு சூரபத்மனை, எழுந்தருளல் செய்தல் நிகழ்ச்சியும், மாலை 6:00 மணிக்கு முருகப்பெருமான் சம்ஹாரத்திற்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், இரவு 10:00 மணிக்கு முருகபெருமான் நான்குமாட வீதிகளில் வலம் வந்து, சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று (நவம்., 13ல்) காலை முருகபெருமான் திருக்கல்யாணம் நடந்தது.