பெரியநாயக்கன்பாளையத்தில் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
ADDED :2548 days ago
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள சொக்கலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று (நவம்., 20ல்) மாலை, 4:00 மணிக்கு நந்தியம் பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.
மூலவரான சொக்கலிங்கருக்கும் சிறப்பு பூஜை நடந்தது. நந்தி வாகனத்தில் சிறப்பு அலங்கார த்தில் சிவகாமி உடனமர் சொக்கலிங்கேஸ்வர் பஜனை கோஷ்டியினருடன் திருச்சுற்று வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இதேபோல், செல்வபுரத்தில் உள்ள தன்னாசியப்பன் கோவில், துடியலூர் விருந்தீஸ்வரர் கோவில், இடிகரை வில்லீஸ்வரர் கோவில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.