காஞ்சிபுரத்தில் கார்த்திகை தீபத்திற்கு சிறப்பு பேருந்துகள்
ADDED :2548 days ago
காஞ்சிபுரம்: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், 23ம் தேதி, கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற உள்ளது.
இத்திருவிழாவிற்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து,அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படு கின்றன.நாளை (நவம்., 22) மற்றும் நாளை மறுநாள் (நவம்., 23), காஞ்சிபுரம், தாம்பரம் பேருந்து நிலையங்களில் இருந்து, 180 சிறப்பு பேருந்துகள்இயக்கப்பட உள்ளன.கூட்டத்திற்கு ஏற்ப இன்று (நவம்., 21) முதல், பேருந்து இயக்கப்படும் என, காஞ்சிபுரம் மண்டல போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்தார்.