ஊட்டி ஐயப்ப பஜனை சபாவின் திருவிழா: ஜன., 15ம் தேதி வரை பூஜை
ஊட்டி:ஊட்டி ஐயப்ப பஜனை சபாவின், 64வது ஆண்டு திருவிழா துவங்கியது. ஜன., 15 வரை மண்டல மற்றும் மகர விளக்கு பஜனை நடக்கிறது. விழாவின், ஒரு நிகழ்ச்சியாக, டிச., 15 காலை, 8:00 மணிக்கு, மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மற்றும் எஸ்.பி., சண்முகப்பிரயா ஆகியோர், திருத்தேர் வடம் பிடித்து துவக்கி வைக்கின்றனர்.
இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, டிச., 9 முதல், 14ம் தேதிவரை நாள்தோறும் காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமம், உஷபூஜை, முனை பூஜை, காழ்ச்சி சீவேலி, நவகம், பஞ்ச கவ்வியம், உச்ச பூஜை, ஸ்ரீபூதபலி நிகழ்ச்சியும், மாலை, 6:30 மணிக்கு, தீபாராதனை, அத்தாழ பூஜை, வலியபாணி மற்றும் உற்சவபலி உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன. இவ்விழாவை ஒட்டி, நாள்தோறும், பகல், 12:30 மணிக்கு, அருள்மிகு ஐயப்பன் கோவிலில், பக்தர்களுக்கு அன்னதானம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர் மற்றும் விழா குழுவினர்
செய்து வருகின்றனர்.