உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை தீபத்திருவிழா: குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா

திருவண்ணாமலை தீபத்திருவிழா: குதிரை வாகனத்தில் சுவாமி வீதி உலா

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவில் தீபத்திருவிழாவில், எட்டாம் நாளான இன்று காலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.

பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்ரமண்யர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேசுவரர், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை செய்யப்பட்டது. 10:00 மணிக்கு, குதிரை வாகனத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் தனித்தனியாக அலங்கரிக்கப்பட்டு, மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலை, 4:00 மணிக்கு வெள்ளி கைலாச வாகனத்தில், பிச்சாண்டவர் மாட வீதி உலா வந்தார். பஞ்ச மூர்த்திகளும், தனித்தனியாக குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !