பிரசன்ன விநாயகர் கோவிலில் திருப்பணி தீவிரம்
ADDED :5066 days ago
உடுமலை:உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தையொட்டி, திருப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் கடந்த 1996ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது. விழா நடத்தப்பட்டு, 15 ஆண்டுகள் நிறைவடைந்தையடுத்து, மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு, கடந்தாண்டு பிப்., மாதம் விமான பாலாலயம் நடந்தது.இதனையடுத்து, விமானங்களுக்கு வர்ணம் பூசுதல் உள்ளிட்ட திருப்பணிகள் தொடர்ந்து நடந்தன.நேற்றுமுன்தினம் மூலஸ்தான பாலாலயம் நடத்தப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அடுத்த மாதம் ஐந்தாம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுவதையடுத்து கோவிலுள்ள கால பைரவர் உள்ளிட்ட சுவாமிகளின் சன்னதிகளிலும் திருப்பணிகள் தீவிரமாக நடக்கின்றன.