பொள்ளாச்சியில் சத்ய சாய்பாபா ஜெயந்தி விழா சத்சங்கம்
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், சத்ய சாய்பாபாவின், 93வது பிறந்த நாள் விழாவையொட்டி, சத்சங்கம் மற்றும் சாய் பஜன் நிகழ்ச்சி நடந்தது.பொள்ளாச்சி ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி சார்பில், சத்ய சாய்பாபாவின், 93வது ஜெயந்தி விழா நிகழ்ச்சிகள், வெங்கடேசா காலனி சாய் மதுரம் கோவிலில் நடந்தது. தினமும் காலை, 5:00 மணிக்கு, ஓம்காரம், சுப்ரபாரதம், நகர சங்கீர்த்தன பூஜை நடந்தது.நேற்றுமுன்தினம் காலை, 6:00 மணிக்கு காயத்ரி மந்திரபாராயணம், காலை, 9:00 மணிக்கு கணபதி ேஹாமம், திருமண தடை நீங்க சுயம்வர கலா பார்வதி ேஹாமம், காலை, 10:00 மணிக்கு அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு புத்தாடை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது.மதியம், 12:00 மணிக்கு சிறப்பு நாராயண சேவையும் நடந்தது. தொடர்ந்து, மாலையில், புட்டபர்த்தி பிரசாந்தி பஜன் பாடகர் சுப்பாராவ் சாய்ராமின், சத்சங்கம், சாய் பஜன் நிகழ்ச்சி நடந்தது. இரவு, 8:00 மணிக்கு ஊஞ்சல் உற்வசம், மகா மங்கள ஆரத்தியும் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.