உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கால பைரவர் - பெயர்க்காரணம்?

கால பைரவர் - பெயர்க்காரணம்?

காலச்சக்கரத்தில் 12 ராசிகள் அடக்கம். இந்த ராசிகளில் தான், மக்கள் பிறக்கிறார்கள். இவர்களை பாதுகாக்கக் கூடியவராக இருப்பதால், இவருக்கு கால பைரவர் என பெயர் ஏற்பட்டது. தலையில் மேஷம், வாயில் ரிஷபம், கைகளில் மிதுனம், மார்பில் கடகம், வயிற்றில் சிம்மம், இடுப்பில் கன்னி, புட்டத்தில் துலாம், பிறப்புறுப்பில் விருச்சிகம், தொடையில் தனுசு, முழங்காலில் மகரம், கீழ்க்காலில் கும்பம், பாதத்தின் அடிப்பகுதியில் மீனம் ஆகியவை உள்ளன. ராகு, கேது என்னும் பாம்புகளை அவர் பூணூலாக அணிந்துள்ளார். எனவே, இவரை வழிபட்டால் கிரகதோஷம் பறந்தோடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !