உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாதிக்கலாம் வாங்க!

சாதிக்கலாம் வாங்க!

கிழமைகளில் மங்களவாரம் எனப்படும் செவ்வாய் பைரவர் வழிபாட்டுக்கு ஏற்றது. அதிலும் தேய்பிறை அஷ்டமி செவ்வாயோ மிக விசேஷம்.  கடன் தீரவும், அமைதி கிடைக்கவும், மகிழ்ச்சி நிலவவும், செல்வவளம் பெருகவும்  இந்நாளில் பைரவரை வழிபடலாம். பைரவருக்கு சிவப்பு உடை, செவ்வரளி மாலை அணிவித்து, பாயாசம், உளுந்து வடை, பால், தேன், பழம் நைவேத்யம் செய்து விபூதியால் அபிஷேகம் செய்வது சிறப்பு. வெள்ளியன்று வரும் தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் ஏழரைச் சனி, அஷ்டமத்து சனி, திருஷ்டி தோஷம், திருமணத்தடை நீங்கும். திருவாதிரை நட்சத்திரத்துடன் கூடிய தேய்பிறை அஷ்டமியில் வழிபட, தொழில் மற்றும் கலைத்துறையில் சாதிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !