உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடன் கொடுத்தவர் கவனிக்க...

கடன் கொடுத்தவர் கவனிக்க...

கொடுத்த பணத்தை வசூலிக்க பணியாளனை அனுப்பும் போது, “வறுமையில் வாடும் கடனாளியிடம் சென்றால் அவனை விட்டு விடு! இறைவன் நம்மை மன்னித்து விடக் கூடும்” என்கிறார் நபிகள் நாயகம். மேலும் அவர், “மறுமைநாளில் துயரத்திலிருந்து இறைவன் நம்மைக் காப்பாற்ற வேண்டும் என விரும்புவோர் ஏழைக்கடனாளிக்கு தவணை கொடுக்கவோ, கடன் சுமையை நீக்கவோ செய்யுங்கள்” என்றும் கூறுகிறார். பணவசதியிருந்தும் வாங்கிய கடனை கொடுக்காதவனுக்கு மன்னிப்பு கிடைக்காது. இறைவன் வகுத்த விதிகளின்படி வாழ்ந்து மறைந்தவரின் எல்லா பாவங்களும் மன்னிக்கப் படும். ஆனால் கடனைச் திருப்பிச் செலுத்த வாய்ப்பிருந்தும் தராமல் இருந்தவர்களின் பாவம் மன்னிக்கப்படுவதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !