உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உழைத்து வாழ்வதே சுகம்

உழைத்து வாழ்வதே சுகம்

* யாரையும் சோம்பேறியாக வாழ கடவுள் படைக்கவில்லை. உன்னைத் தாங்கும் பூமி கூட சுழன்றபடியே இருக்கிறது. உழைத்து வாழ்வதே உண்மையான சுகம்.
* உள்ளத்தில் இருக்கும் அன்பை  கண்களில் வெளிப்படுத்து. அப்போது சிலை வடிவில் இருக்கும் தெய்வம் உன்னிடம் பேசுவதைக் கேட்பாய்.
* உறுதிமிக்க உள்ளமும், ஆழ்ந்த பக்தியும் இருப்பவனுக்கு கடவுளின் அருள் கிடைப்பது நிச்சயம்.
* பிறர் பாராட்ட வேண்டும் என்பதற்காக தானம் செய்பவனுக்கு புண்ணியம் கிடைக்காது. பணம் போய்விட்டதே என்று மனஅமைதியும் கெடும்.
* நேர்மையும், கடவுள் நம்பிக்கையும் இருக்குமிடம்  சொர்க்கமாக மாறி விடும்.
* மண், பெண், பொன், புகழ் ஆகிய நான்கும் மனிதனுக்குப் பகை. இவற்றிடம்  இருந்து உன்னைக் காத்துக் கொள்.
* விருப்பும், வெறுப்பும் நரகத்தின் வாசல்கள். விருப்பு வெறுப்பு இல்லாதவன் கடவுளுக்குச் சமமாவான்.
* கடவுளைக் காண உன்னைத் தகுதிப்படுத்திக் கொள். அவர் உனக்குள் காட்சியளிப்பதைக் காணலாம்.
* மனம், சொல், செயல் மூன்றும் ஒன்றுபடும் போது மனிதன் குற்றமற்ற தன்மை கொண்டவனாகி விடுவான்.  –  உபதேசிக்கிறார் சாந்தானந்தர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !