உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை தேர்களுக்கு பாதுகாப்பு தகடு பொருத்தும் பணி துவக்கம்

திருவண்ணாமலை தேர்களுக்கு பாதுகாப்பு தகடு பொருத்தும் பணி துவக்கம்

திருவண்ணாமலை: ஐந்து தேர்களுக்கு பாதுகாப்பு தகடு பொருத்தும் பணிகள் துவங்கின. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கடந்த, 23ல் கார்த்திகை தீப திருவிழா நடந்தது. இதையொட்டி, கடந்த, 20ல் தேர்திருவிழா நடந்தது. இதில், விநாயகர், முருகர், அண்ணாமலையார், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய, ஐந்து தேர்கள் பவனி வந்தன. விழா முடிந்த நிலையில் தேர்களை, வெயில், மழையில் இருந்து பாதுகாக்க, பாதுகாப்பு தகடு பொருத்தும் பணிகள், நேற்று (நவம்., 29ல்) துவங்கின. ஒரு வாரத்தில் பணிகள் முடிக்கப்படும். அடுத்தாண்டு தீபத்திருவிழாவின் போது தான் திறக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !