மேலும் செய்திகள்
களத்துப்பட்டியில் மாடு மாலை தாண்டும் வினோத திருவிழா
4953 days ago
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
4953 days ago
மேலச்சேரி ஆதி திரவுபதியம்மன் கோவிலில் ஜெயந்தி விழா
4953 days ago
திண்டுக்கல் :திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா, பூத்தமலர் பூ அலங்காரத்துடன் நேற்று துவங்கியது. முதல்நாள் நிகழ்ச்சியாக நேற்று காலை அம்மனுக்கு பாலபிஷேகம், மாலை சிறப்பு பூஜையும், பூ அலங்காரம் நடந்தது. இன்று பூச்சொரிதல் விழா நடக்கிறது. பூத்தேர் காலை 9 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்டு மேற்குரதவீதி, கலைகோட்டு விநாயகர் கோயில், ஸ்பென்சனர் தெரு, கோபாலசமுத்திரம் தெரு, கிழக்கு, தெற்கு ரதவீதிகள் வழி, கோயில் வந்து சேரும். அன்று முழுவதும் அம்மனுக்கு பூ அபிஷேகம் நடைபெறும். பிப்., 21 ல் பிற்பகல் 12 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்கி, தொடர்ந்து பல்வேறு சமூகத்தார், நிறுவனத்தாரின் மண்டகபடிகள் நடைபெறும். அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் செய்யப்படும். மார்ச் 4 ல், மஞ்சள் நீராட்டு முடிந்தவுடன் மாலை 5 மணிக்கு கொடி இறக்கம் நடைபெறும்.
4953 days ago
4953 days ago
4953 days ago