உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாபநாசம் கோயிலில் 20ம் தேதி 108 சிவலிங்க பூஜை!

பாபநாசம் கோயிலில் 20ம் தேதி 108 சிவலிங்க பூஜை!

விக்கிரமசிங்கபுரம் : பாபநாசம் கோயிலில் வரும் 20ம் தேதி 40வது மகா சிவராத்திரி திருமுறை விழாவும், 108 சிவலிங்க பூஜையும் நடக்கிறது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா வரும் 20ம் தேதி நடக்கிறது. விழாவை முன்னிட்டு பாபநாசம் உலகாம்பிகை சமேத பாபவிநாசர் கோயிலில் 108 சிவலிங்க பூஜையும், இதனை தொடர்ந்து திருமுறை விழாவும் நடக்கிறது. கோயிலில் இரவு 7 மணிக்கு நடைபெறும் சிவலிங்க பூஜையை கல்லூரி பேராசிரியர் முருகலிங்கம் துவக்கி வைக்கிறார். பின்னர் விக்கிரமசிங்கபுரம் திருவாடுதுறை ஆதீன தேவாரப் பாடசாலை மாணவர்களின் திருமுறை இசை நடக்கிறது. இதனை தொடர்ந்து "திருஞானசம்பந்தர் தேவாரம் என்ற தலைப்பில் விக்கிரமசிங்கபுரம் பிரிலியண்ட் ஆங்கிலப்பள்ளி முதல்வர் பாரதி கண்ணன், "அப்பர் தேவாரம் என்ற தலைப்பில் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி பணிநிறைவு பேராசிரியர் விஜயலெட்சுமி, "சுந்தரர் தேவாரம் என்ற தலைப்பில் பொட்டல் அரசு உயர்நிலைப்பள்ளி மீனாட்சிசுந்தரம், "மாணிக்கவாசகர் திருவாசகம் என்ற தலைப்பில் விக்கிரமசிங்கபுரம் மதுராகோட்ஸ் ஆலை அம்மையப்பன், "திருவிசைப்பா என்ற தலைப்பில் பி.எல்.டபுள்.யு.ஏ., மேல்நிலைப்பள்ளி மீனா, "திருப்பல்லாண்டு என்ற தலைப்பில் விக்கிரமசிங்கபுரம் தேவாரப் பாடசாலை ஆசிரியர் முருகையாபிள்ளை, "திருமந்திரம் என்ற தலைப்பில் திருவாவடுதுறை ஆதீனசமய பரப்புநர் கோமதி திருநாவுக்கரசு, "பதினொன்றாம் திருமுறை திருஏகாதசமாலை என்ற தலைப்பில் பாபநாசம் திருவள்ளுவர் கல்லூரி பேராசிரியர் முருலிங்கம், "பெரியபுராணம் என்ற தலைப்பில் விக்கிரமசிங்கபுரம் பி.எல்.டபுள்யு.ஏ., மேல்நிலைப்பள்ளி இளங்கோ ஆகியோர் சொற்பொழிவு ஆற்றுகின்றனர்.ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ஆனந்தகுமார்ராவ், விக்கிரமசிங்கபுரம் திருமுறை தொண்டர் குழாம் செயலாளர் முருகையாபிள்ளை செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !