உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / டிச. 26ல் அகத்தியர் ஜெயந்தி: சர்வரோக நிவாரணம் யாகம்

டிச. 26ல் அகத்தியர் ஜெயந்தி: சர்வரோக நிவாரணம் யாகம்

திண்டுக்கல்: 18 சித்தர்களில் முதலாவது சித்தரான அகத்திய மாமுனியின் ஜெயந்தி விழா வருகிற டிசம்பர் 26 ம்தேதி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தை உலக சித்தர்கள் தினம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விழா திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை வெள்ளி மலை அடிவாரம் (தியானப்பாறை) ஸ்ரீ அகஸ்தியர் மகரிஷி ஒளி தேக ஷேத்ரம் "அகஸ்தியர்புரத்தில் நடக்கிறது.  அகத்தியரின் ஜென்ம நட்சத்திரமான மார்கழி ஆயில்யமான டிச. 26 காலை 9 மணிக்கு குரு ஓரையில் அகஸ்தியர் ஜெயந்தி விழா மற்றும் பூமி( பிரித்வி ) தோசம் நிவாரணம் யாகம், சர்வரோக நிவாரணம் யாகம் சிறப்பாக நடக்க இருக்கிறது. இதற்கான விழா ஏற்பாடுகளை அகஸ்தியர் "பெருமாள்" வெள்ளி மலை கோவில் டிரஸ்ட் செய்து வருகிறது.

தொடர்புக்கு : 9942887641, 9442029945 , 9786395006 , 9786834050
பஸ் ரூட் : திண்டுக்கல் To  அகஸ்தியர்புரம்
காலை 6:15,9:15, மதியம் 12.15 மாலை 4.20 இரவு 10.20
திண்டுக்கல் To சிறுமலை
காலை 4.35,5.30,8.00,9.15,10.00,10.30, 10.40, 11.30 மதியம் 1.20.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !