உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயில் நடைதிறப்பில் மாற்றம்

திருப்பரங்குன்றம் கோயில் நடைதிறப்பில் மாற்றம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம், திருநகர் கோயில்களில் மார்கழியை முன்னிட்டு டிச.,16 முதல் ஜன., 14 வரை நடை திறப்பு நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு உச்சிகால பூஜைகள் முடிந்து பகல் 12:00 மணிக்கு சாத்தப்படும். மீண்டும் மாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8:30 மணிக்கு நடை சாத்தப்படும்.

திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் அதிகாலை 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு காலை 10:30 மணிக்கு நடை சாத்தப்படும். மீண்டும் மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 8:00 மணிக்கு நடை சாத்தப்படும். மார்கழி மாதம் முழுவதும் காலை 5:30 மணிக்கு திருப்பாவை, திருவெம்பாவை பாடப்படும். ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத சீனிவாசபெருமாளுக்கும் தினமும் மார்கழி சிறப்பு பூஜை நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !