உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சானுாரில் 3 டன் மலர்களால் அர்ச்சனை

திருச்சானுாரில் 3 டன் மலர்களால் அர்ச்சனை

திருப்பதி: திருச்சானுாரில் உள்ள பத்மாவதி தாயாருக்கு, வருடாந்திர புஷ்ப யாகத்தை முன்னிட்டு, 3 டன் மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டது.ஆந்திர மாநிலம், திருச்சானுார் பத்மாவதி தாயாருக்கு, ஒன்பது நாட்களாக வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்தது. பிரம்மோற்சவம் முடிந்த பின், தாயாருக்கு புஷ்ப யாகம் நடப்பது வழக்கம். அதன்படி நேற்று, வருடாந்திர புஷ்ப யாகம் நடந்தது.யாகத்திற்கு தேவையான மலர்கள், இலைகள் அனைத்தையும், மாநில தோட்ட கலைத்துறை அதிகாரிகள, நிறம் வாரியாக தனித்தனியாக பிரித்து மூங்கில் கூடைகளில் வைத்து, கோவிலுக்கு எடுத்து வந்தனர்.அதன்பின், தாயாரை அலங்கரித்து, அவருக்கு மலர் மாலைகள், நெய்வேத்தியங்கள் சமர்ப்பித்து, புஷ்ப யாகத்தை அர்ச்சகர்கள் துவங்கினர்.

ரோஜா, மல்லிகை, சம்பங்கி, கனகாம்பரம், தேன்பூ, அரளி, தாமரை, அல்லி, சாமந்தி, தாழம்பு, மருவு, துளசி, வில்வம், மரிக்கொழுந்து, பச்சிலை உள்ளிட்ட மலர்கள்,இலைகளால், தாயாருக்கு அர்ச்சனை நடத்தப்பட்டது.இதற்காக ஆந்திரா, தமிழகம், கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து, பல வகையான மலர்கள் தருவிக்கப்பட்டன; இவற்றின் மொத்த எடை, 3 டன் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !