சபரிமலை பாதுகாப்பில் கோவை வீரர்கள்
ADDED :2503 days ago
சபரிமலை: சபரிமலை சன்னிதான சுற்றுப்புறங்களில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் திட்டமிட்டு துல்லிய பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.சபரிமலைக்கு தீவிரவாதிகள் அச்சுறுத்தல் உள்ளதாக உளவுத்துறை தகவல் தெரிவித்ததை தொடர்ந்து 2011-ம் ஆண்டு முதல் மத்திய அதிவிரைவு படையினரும், தேசிய பேரழிவு நிவாரண படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் நடத்தவும் உதவுகின்றனர்.தற்போது கோவை பிரிவை சேர்ந்த 260 மத்திய அதிவிரைவு படை வீரர்கள் வந்துள்ளனர். இவர்கள் சன்னிதானம், பம்பையில் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேசிய பேரழிவு நிவாரண படையின் அரக்கோணம் பிரிவில் இருந்து 93 வீரர்கள் வந்துள்ளனர். இவர்கள் போலீசாருடன் இணைந்து செயல்படுகின்றனர்.