அய்யப்பன் கோவிலில் விளக்கு பூஜை
ADDED :2505 days ago
புல்லரம்பாக்கம்: புல்லரம்பாக்கம் அய்யப்பன் கோவிலில், 15ம் ஆண்டு திருவிளக்கு பூஜையை முன்னிட்டு, உற்சவர் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருவள்ளூர் அடுத்த, புல்லரம்பாக்கம் லட்சுமி விநாயகர் கோவிலில் உள்ள அய்யப்பன் சன்னதியில், ௧௫ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி, காலை அய்யப்பனுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது.மாலையில், அய்யப்பன் வீதிஉலா வந்தார். அப்போது, பக்தர்கள், கையில் திருவிளக்கு ஏந்தி அய்யப்பனை வரவேற்றனர். பின், கோவிலில் விளக்கு ஏற்றி, அய்யப்பனை வழிபட்டனர். இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.