காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் இன்று ஆன்மிக உரை
ADDED :2506 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், சமயக்குரவர் நால்வரின் மகத்துவத்தில் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் ஆன்மிக நெறியாளர்கள், இன்று, உரையாற்றுகின்றனர்.உலகளாவிய ஆன்மிக சங்கம் சார்பில், சமயக்குரவர்கள் என அழைக்கப்படும், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் ஆகியோரது மகத்துவத்தில் ஓர் ஆய்வு என்ற தலைப்பில், பஞ்சபூத ஸ்தலங்களில் ஆன்மிக நெறியாளர்கள் உரையாற்றி வருகின்றனர்.அதன்படி, காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் கோவிலில், இந்நிகழ்ச்சி, இன்று, காலை, 7:00 முதல், மாலை, 5:00 மணி வரை நடைபெறுகிறது.தலைமை ஆய்வாளர் திருவாரூர் நடராஜன் சுவாமிகள் மற்றும் ஆன்மிக நெறியாளர்கள் பலர், சைவ சமயத்தின் பன்னிரு திருமுறைகள் குறித்து ஆய்வுரை வழங்குகின்றனர்.