துர்க்கையம்மன் கோவிலில் மண்டலாபிஷேகம் நிறைவு
ADDED :2506 days ago
சங்கராபுரம்:சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில் துர்க்கையம்மன் கோவிலில் மண்டலாபிஷேக நிறைவை முன்னிட்டு மகா சண்டி ஹோமம் நடந்தது. தேவபாண்டலம் ஏரி கரையில் புதிதாக துர்க்கையம்மன் கோவில் கட்டபட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி 48 நாட்கள் மண்டலாபிஷேகம் நடந்தது. நேற்று மண்டலாபிஷேக நிறைவு நாளை முன்னிட்டு காலை கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து 10 க்கும் மேற்பட்ட வேதவிற்பன்னர்கள் முன்னிலையில் யாகசாலை பூஜை, மகா சண்டி ஹோமம் நடந்தது. பகல் 12:00 மணிக்கு பூர்ணாஹீதி, அபிஷேகம் மகா தீபாராதனை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை தேவபாண்டலம், அ.பாண்டலம்,கிடங்கன்பாண்டலம்,ராஜ பாண்டலம் கிராம பொது மக்கள் செய்திருந்தனர்.