உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரத்தில் மகா சிவராத்திரி நடைதிறப்பு!

ராமேஸ்வரத்தில் மகா சிவராத்திரி நடைதிறப்பு!

ராமேஸ்வரம்: மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் நடை வழக்கம்போல், இன்று பிப்., 20 அதிகாலை திறக்கப்பட்டு, நாளை (பிப்., 21) மாசி அமாவாசையன்று, மதியம் ஒரு மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். இதையொட்டி, இன்று ஸ்படிக லிங்க பூஜை முடிந்து, கால பூஜைகள் நடந்தபின், நாளை மதியம் வரை, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.நாளை மதியம் 1 மணிக்கு, கோவில் நடை சாத்தப்பட்டு, பின் மாலை 3 மணிக்கு வழக்கம்போல், கோவில் நடை திறக்கப்படும்.அமாவாசையை முன்னிட்டு, பகல் 10 மணிக்கு, சுவாமி, அம்பாள் தங்க ரிஷப வாகனங்களில், அக்னிதீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி, தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். இத்தகவலை, கோவில் இணை கமிஷனர் ஜெயராமன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !