உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகுண்ட ஏகாதசி: கோயில்களில் குவிந்த பக்தர்கள்

வைகுண்ட ஏகாதசி: கோயில்களில் குவிந்த பக்தர்கள்

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருவல்லிக்கேணி உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு தேவி, பூதேவியுடன் பக்தரகளுக்கு பார்த்தசாரதி பெருமாள் காட்சியளித்தார். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி  கோயில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் வழியாக பக்தர்களுக்கு பெருமாள் அருள் பாலித்தார். நீண்ட வரிசையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருநீர்மலை, ரங்கநாதப் பெருமாள் பரமபத வாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். திருப்பதியில் இன்று(18ம் தேதி) அதிகாலை முதல் நாளை 12.30 மணி வரை 44 மணி நேரத்துக்கு பக்தர்கள் தொடர் தரிசனம் செய்ய உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !