மதுரை கூடலழகர் பரமபதவாசல் திறப்பு: பக்தர்கள் பரவசம்
ADDED :2593 days ago
மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி தினத்தை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நடைபெற்றது.
வைகுண்ட ஏகாதசி தினத்தை முன்னிட்டு, கூடலழகர் பெருமாள் கோயிலில் இன்று காலை ஆதிசேஷன் மீது சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை 7.15 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் வழியாக பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்கள் தாங்கள் இருந்த இடத்திலிருந்தே தரிசித்து மகிழ www.dinamalar.com ல் பரமபதவாசல் திறப்பு நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.