கோட்டை முனியப்பன் கோயிலில் நாகப்பாம்பு
ADDED :2487 days ago
எரியோடு: எரியோட்டில் திண்டுக்கல் ரோடு பகுதியில் கோட்டை முனியப்பன் சுவாமி கோயில் உள்ளது. இதன் வாயில் பகுதியில் சிறிய விளக்கு மாடம் இருக்கிறது. இப்பகுதி மக்கள் வெளியூர் பயணம் துவங்கும் முன்னர் இந்த மாடத்தில் விளக்கேற்றி செல்வர். இந்நிலையில் நேற்று மதியம் நாகப்பாம்பு ஒன்று மாடத்திற்குள் புகுந்து படம் எடுத்து ஆடியது. சிறிது நேரத்திலேயே இது எரியோடு பகுதி முழுவதும் பரபரப்பான தகவலாக மாறியது. இதனால் மக்கள்
கூட்டம் கூட்டமாக வந்து படமெடுத்து ஆடிய பாம்பை இரவு வரை பார்த்து சென்றனர்.