உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை கோவில்களில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

உடுமலை கோவில்களில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

உடுமலை:உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், திருவாதிரை திருநாளையொட்டி, ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடந்தது.மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை நாளில் சிவபெரு மான், பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசனம்வழங்கி அருள் பாலிக்கிறார்.

உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, நேற்று முன்தினம் (டிசம்., 22ல்) நடராஜர் சமேத சிவகாமி அம்மன் திருக்கல்யாண வைபவம் நடந்தது.

தொடர்ந்து, நேற்று (டிசம்., 23ல்) அதிகாலை, 4:00 மணிக்கு, 16 வகையான திரவியங்களில், சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், நடராஜர் சமேத சிவகாமி அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை, 10:00 மணிக்கு சுவாமிகளின் திருவீதி உலா நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.வெஞ்சமடை, மங்களாம்பிகை உடனமர் வாஞ்சிநாத ஈஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடந்தது.

நேற்றுமுன்தினம் (டிசம்., 22ல்), நடராஜர் சமதே சிவகாமி அம்மனுக்கு ஆருத்ரா அபிஷேகம் தொடர்ந்து திருக்கல்யாண வைபவம் நடந்தது. நேற்று (டிசம்., 23ல்), காலை, 6:00 மணிக்கு ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி நடந்தது.

உடுமலை, ரத்னலிங்கேஸ்வரர் கோவில், கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சுற்றுப்பகுதி சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பு வழிபாடுநடந்தது.

* மடத்துக்குளம்: மடத்துக்குளம் தாலுகா கொழுமத்தில்,சோழர்கள் ஆட்சியில், கட்டப்பட்ட, தாண்டேசுவரர் கோவில் மற்றும் கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் வரலாற்று சிறப்பு மிக்கதாகும். ஆண்டு தோறும், வைகுண்ட ஏகாதசி, திருவாதிரை திருக்கல்யாணம், ஆருத்ரா தரிசன விழாக்கள் நடக்கும்.

நேற்றுமுன்தினம்(டிசம்., 22ல்) இரவு, 7:00 மணிக்கு சிவகாமி உடனமர் தாண்டேசுவரசுவாமி திருக்கல்யாணம், 8:30 மணிக்கு தீப ஆராதனை நடந்தது. நேற்று (டிசம்., 23ல்), காலை 3:00 மணிக்கு, அபிஷேகம் செய்வதோடு, ஆருத்ரா தரிசன விழா தொடங்கியது. காலை, 6:00 மணிக்கு ஆருத்ரா தரிசனம், மகா தீபாராதனை, 7:00 மணிக்கு சுவாமி திருவீதிஉலா நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !