ஈரோடு மாரியம்மன் கோவிலில் கம்பத்துக்கு வழிபாடு
ADDED :2493 days ago
ஈரோடு: ஈரோடு சூரம்பட்டி வலசு, சுயம்பு மஹா மாரியம்மன் கோவில் பொங்கல் விழா, கடந்த, 25ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட கம்பம், கோவில் முன் நடப்பட்டது. இதையடுத்து நேற்று அதிகாலை முதல், கம்பத்துக்கு மஞ்சள், வேப்பிலை கலந்த புனித நீர் ஊற்றி, மக்கள் வழிபடத் தொடங்கியுள்ளனர். இன்று, இரவு 7:00 மணிக்கு பூவோடு வைத்தல் நிகழ்ச்சி, 8ல் காவிரி ஆற்றில் தீர்த்தம் கொண்டு வருதலும் நடக்கிறது. முக்கிய நிகழ்வான பொங்கல், மாவிளக்கு மாற்றுதல் நிகழ்ச்சி, 9ல் நடக்கிறது.