ஓங்காளியம்மன் தீ மிதி திருவிழா: பக்தர்கள் நேர்த்திக்கடன்
ADDED :2493 days ago
ஓமலூர்: ஓங்காளியம்மன் கோவில் திருவிழாவில், திரளான பக்தர்கள், தீ மிதித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். ஓமலூர், தொளசம்பட்டி, சந்தைப்பேட்டை அருகேவுள்ள, ஓங்காளிம்மன் கோவில் திருவிழா, கடந்த, 29ல் தொடங்கியது. அன்றிரவு, அம்மனுக்கு சத்தாபரணம் நடந்து, முக்கிய வீதிகளில் உலா வந்து அருள்பாலித்தார். நேற்று காலை, மூலவர் அம்மன், மலர் அலங்காரத்தில் வீற்றிருந்தார். மதியம், கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த பூக்குண்டத்தில், திரளான பக்தர்கள், தீ மிதித்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, அக்னி, பூங்கரகம், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடந்தது.