உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரட்டானேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி மகாயாகம்

வீரட்டானேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி மகாயாகம்

பண்ருட்டி: பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவர் சன்னதியில் அஷ்டமி மகாயாகம் நடந்தது.பண்ருட்டி அடுத்த திருவதிகை அம்பாள் பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் (29ம் தேதி) தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு காலபைரவர் சன்னதியில் உலக நன்மை பெற வேண்டி மகா அஷ்டமி யாகம் நடந்தது.இதனையொட்டி, மாலை 6:00 மணியளவில் கலச ஸ்தாபனம் செய்யப்பட்டு, சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க 108 ஹோம திரவியங்களால் யாகசாலை பூஜைகள் நடந்தது.பின் பால்,தேன், சந்தனம் மற்றும் 21 வகையான மூலிகை பொடிகளால் அபிஷேகம் செய்யப்பட்டு கலசநீரால் மகாஅபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !