வால்பாறையில், பகவதி அம்மனுக்கு உற்சவ திருவிழா
ADDED :2510 days ago
வால்பாறை:வால்பாறையில், பகவதி அம்மனுக்கு மார்கழி மாத உற்சவத்திருவிழா நடந்தது. வால்பாறையில், கொடுங்கலூர் பகவதி அம்மன் மார்கழி மாத உற்சவ திருவிழா நேற்று முன்தினம் (டிசம்., 30ல்) துவங்கியது.
நல்லகாத்து விளையாட்டு மைதானத்திலிருந்து புறப்பட்ட ஊர்வலத்தை தம்புரான் கிரீஸ்சாமி, குருக்கள் சீபு, கோபி (கேரளா) ஆகியோர் துவக்கி வைத்தனர்.கொடுங்கலூர் பகவதி அம்மன் பக்தர்கள் வாள் ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சென்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.