உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தியில் சிவராத்திரி விழா: 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

காளஹஸ்தியில் சிவராத்திரி விழா: 2 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

நகரி:மகா சிவராத்திரி தினத்தையொட்டி, காளஹஸ்தியில் நேற்று இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.கோவிலில் வாயுலிங்கேஸ்வரர், ஞானபிரசூணாம்பிகை தாயார் சன்னிதியில், அதிகாலை சிறப்பு பூஜைக்கு பின், பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். ஓம் நமசிவாயா என்ற பக்தர்களின் கோஷம் காளஹஸ்தி கோவிலிலும், நகரின் முக்கியப் பகுதிகளிலும் ஓங்கி ஒலித்தது. ஆயிரக்கணக்கானோர் நேர்த்திக்கடனாக முடி காணிக்கை செலுத்தினர்.காளஹஸ்தி கோவிலில் சிவராத்திரி பிரம்மோற்சவத்தையொட்டி, நேற்று ராகு, கேது பூஜை ரத்து செய்யப்பட்டது. ஞானபிரசூணாம்பிகை தாயார் சமேதராக, வாயுலிங்கேஸ்வர சுவாமி திருமாட வீதியில், நந்தி, சிம்ம வாகன சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.திருப்பதியில், கபிலதீர்த்தம் தலத்தில் அமைந்துள்ள கபிலேஸ்வர சுவாமி கோவிலிலும், சிவராத்திரி விழா சிறப்பாக நடந்தது. அதேபோல், ராமகிரி பகுதியில் உள்ள வாலீஸ்வரர் கோவிலிலும், மகா சிவராத்திரி விழா வெகு விமர்ச்சையாக நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !