உடுமலை, புனித செபஸ்தியர் கத்தோலிக்கா தேவாலயத்தில் திருவிழா
ADDED :2508 days ago
உடுமலை:உடுமலை, புனித செபஸ்தியர் கத்தோலிக்கா தேவாலயத்தில், ஆரோக்கிய அன்னை, புனித செபஸ்தியர் மற்றும் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை திருநாள், 5 ம் தேதி நடக்கிறது. தேவாலயத்தில், இத்திருநாள், கடந்த மாதம் 30ம் தேதி மாலை, திருப்பலி மற்றும் கொடியேற்றத் துடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் 31ம் தேதி , நவநாள் பிரார்த்தனை நடந்தது. வரும், 4ம் தேதி மாலையில் அம்பு ஆசீர்வதித்தல் நடக்கிறது. ஜன., 5ம் தேதி காலை, அம்பு வீடுகளுக்கு எடுத்து செல்லுதல் மற்றும் ஜன., 6ம் தேதி மாலை, கூட்டு திருப்பலி நடக்கிறது.