உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / போத்தனூர் தர்மசாஸ்தா கோவிலில் தசாவதார அலங்காரம்

போத்தனூர் தர்மசாஸ்தா கோவிலில் தசாவதார அலங்காரம்

போத்தனூர்:குறிச்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்பிலுள்ள, தர்மசாஸ்தா கோவிலில், மகாவிஷ்ணு, வராகரூப அலங்காரத்தில் காட்சியளித்தார்.

மகாவிஷ்ணு ஒவ்வொரு சூழலிலும் ஒவ்வொரு அவதாரத்தை எடுத்து உலகை ரட்சித்தார். அந்நிகழ்வை போற்றும் வகையில், குறிச்சி ஹவுசிங் யூனிட்டிலுள்ள தர்மசாஸ்தா கோவிலில், கடந்த இரு நாட்களாக மச்ச, கூர்ம அவதாரங்களில் மகாவிஷ்ணு காட்சி யளித்தார்.

மூன்றாம் நாளான நேற்று (ஜன., 7ல்), வராக அவதாரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து, நரசிம்மர், வாமணர், பரசுராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர் மற்றும் கல்கி அவதாரத்தில் அருள்பாலிப் பார்.இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், மார்கழி மாதத்தில் பாவை நோன்பு நோற்று திருப்பாவையை பக்தர்கள் பாராயணம் செய்கின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தர்மசாஸ்தா கோவிலில் தனி சன்னிதி கொண்டிருக்கும் மகாவிஷ்ணு, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அவதார கோலத்தில் காட்சியளிப்பார்,என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !