உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமர் கோவில் கட்டுமான பணி துவங்க வேண்டும்

ராமர் கோவில் கட்டுமான பணி துவங்க வேண்டும்

லக்னோ: அயோத்தியில், ராமர் கோவில் கட்டுமான பணிகளை, முன்னதாகவே துவக்க வேண்டும், என, ராம ஜென்மபூமி அறக்கட்டளை தலைவர், மஹந்த் நிரிதியா கோபால் தாஸ் தெரிவித்து உள்ளார்.உத்தர பிரதேச மாநிலத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. லக்னோவில் நேற்று, ராம ஜென்மபூமி அறக்கட்டளை தலைவர், மஹந்த் நிரிதியா கோபால் தாஸ் கூறியதாவது:அயோத்தியில், ராமர் கோவில் கட்டுமானப் பணிகளை முன்னதாகவே துவக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தீர்வு காண, பிரதமர் நரேந்திர மோடிக்கு, கடவுள் ராமரின் பக்தர்கள் எப்போதும் உறுதுணையாக இருப்பர்.இது தொடர்பான வழக்கு, 70 ஆண்டுகளாக, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணை நீட்டிக்கப்படுவது, ஹிந்துக்களின் மனதை மிகவும் கஷ்டபடுத்துகிறது.நாங்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஹிந்து மதத்தினரும், இந்த விவகாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி தீர்வு பெற்றுத் தருவார் என, நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !