கோவையில் ஸ்ரீ தர்ம சாஸ்தா பூஜா சங்க 69வது ஆண்டு விழா
ADDED :2560 days ago
கோவை:ஸ்ரீ தர்ம சாஸ்தா பூஜா சங்கத்தின், 69வது ஆண்டு விழா, ஆர்.எஸ்.புரம் பலிஜா நாயுடு கல்யாண மண்டபத்தில் துவங்கியது. வீரமணி ராஜூ மற்றும் அபிஷேக் ராஜூ குழுவினரின் பக்தி பாடல்கள் இசை நிகழ்ச்சி நடந்தது.
இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, பக்தி இசை மழையில் நனைந்தனர். கணபதி ஹோமத் துடன் துவங்கி, ஸ்ரீ தர்ம சாஸ்தா ஆவாஹனம், மகன்யாச ருத்ரஜபம் நடந்தது. காலையில் கட்டுநிறையை தொடர்ந்து புஷ்பாஞ்சலியும், கானாபிஷேகமும் நடந்தது. அதன் பின் மகாதீபாராதனை காட்டப்பட்டது.